செய்முறை தேர்வை புறக்கணிக்க ஆசிரியர்கள் முடிவு
கடலூர்: பிளஸ் 2 செய்முறை தேர்வைப் புறக்கணிக்க முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட கல்வி அலுவலர் (டி.இ.ஓ.,) காலி பணியிடங்களை நிரப்புவதில் முதுகலை பட்டதாரி மற்றும் தலைமை ஆசிரியர்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பிளஸ் 2 செய்முறை தேர்வை புறக்கணித்து அரசின் கவனத்தை ஈர்க்க முடிவு செய்துள்ளனர்.ஜன. 24ம் தேதி தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர் கழகங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் விழுப்புரம், தஞ்சாவூர், சேலம், மதுரை ஆகிய நான்கு மண்டலங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளனர்.