உள்ளூர் செய்திகள்

மூன்று புதிய அங்கன்வாடி கட்டடங்கள் திறப்பு

சென்னை: டி.பி.சத்திரத்தில், 54.29 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட, மூன்று புதிய அங்கன்வாடி கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டன. அண்ணாநகர் மண்டலம், 102வது வார்டு டி.பி.சத்திரத்தில், பழைய பேருந்து நிலைய சாலையில், 17.3 லட்சம் ரூபாய் செலவிலும், 9வது குறுக்கு தெருவில், 19.69 லட்சம் ரூபாய் செலவிலும், கஜபதி சாலையில், 17.3 லட்சம் ரூபாய் செலவிலும், புதிய அங்கன்வாடி கட்டடங்கள் கட்டப்பட்டு இருந்தன. அந்த கட்டடங்களை, கைத்தறி துறை அமைச்சர் கோகுலஇந்திரா, சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி ஆகியோர் திறந்து வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்