உள்ளூர் செய்திகள்

கணக்கு பாடம் எடுத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி

காஞ்சிபுரம்: வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிக்கு பார்வையாளராக நியமிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரி, திடீரென பள்ளி வகுப்பறைக்கு சென்று மாணவர்களுக்கு பாடம் நடத்தினார். காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிக்கான தேர்தல் பார்வையாளராக, அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மாநில திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி ஐ.ஏ.எஸ்., நியமிக்கப்பட்டுள்ளார். காஞ்சிபுரத்திற்கு நேற்று வந்த அவர், வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியை பார்வையிட, பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளிக்கு சென்றார். அங்கு வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியை பார்வையிட்ட பின்னர், பள்ளியின் முதல் தளத்தில் உள்ள 8ம் வகுப்பு அறைக்கு சென்றார். அங்கு வகுப்பு ஆசிரியர், கணித பாடம் நடத்திக் கொண்டிருந்தார். எனவே, பூஜா குல்கர்னியும் கணித பாடம் எடுக்க துவங்கினார். மாணவர்களிடம் பாடம் குறித்த கேள்விகளை எழுப்பினார். அதன் பின், 10 நிமிடம் கழித்து அங்கிருந்து புறப்பட்டு சென்றார். ஐ.ஏ.எஸ்., அதிகாரி, திடீரென பள்ளி வகுப்பறைக்கு சென்று, பாடம் நடத்தியதால் பள்ளி வளாகம் பரபரப்பானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்