ராமச்சந்திரா பல்கலை ஆய்வகத்திற்கு சிறப்பு சான்று!
சென்னை: ராமச்சந்திரா பல்கலைக்கு, தேசிய நல் ஆய்வக செயல்முறை கண்காணிப்பு ஆணைய சான்று பெற்ற, இந்தியாவின் முதல் மருத்துவ பல்கலை என்ற சிறப்பு கிடைத்துள்ளது என, ஆய்வக தலைவர் தணிகாசலம் தெரிவித்தார். சென்னை, ராமச்சந்திரா பல்கலையின் ஆய்வகம், தேசிய நல் ஆய்வக செயல்முறை கண்காணிப்பு ஆணைய சான்று பெற்றுள்ளது. பல்கலையில் நடந்த விழாவில், இதற்கான சான்றிதழை, ஷசுன் பார்மா சூட்டிக்கல் நிறுவன தலைவர் அபய்குமார், பல்கலை வேந்தர் வெங்கடாசலம் மற்றும் இதய நோய் நலத்துறை தலைவரும், ஆய்வக இயக்குனருமான தணிகாசலத்திடமும் வழங்கினார்.