உள்ளூர் செய்திகள்

மாணவர்கள் கையில்தான் எதிர்காலம்: டி.ஜி.பி., சைலேந்திரபாபு

நிலக்கோட்டை: மாணவர்கள் கையில்தான் எதிர்காலம் உள்ளது என கூடுதல் டி.ஜி.பி., சைலேந்திரபாபு பேசினார். நிலக்கோட்டையில் உள்ள கே.சி.எம்.,மெட்ரிக்குலேசன் மேல் நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் கடலோர காவல்படை கூடுதல் டி.ஜி.பி., சைலேந்திரபாபு பேசுகையில், "மாணவர்களாகிய உங்களது பெற்றோர்கள் கல்வியின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்து வைத்துள்ளனர். அவர்கள் செய்யும் கடினமான பணிகளைக் காட்டிலும் உங்களின் படிக்கும் பணி ஒன்றும் கடினமானது இல்லை. நீங்கள் ஆர்வத்துடன் படிக்க ஆரம்பித்தால் மிகவும் எளியதாக இருக்கும். உங்கள் பெற்றோர் ஏழைகளாக இருக்கலாம், மாணவர்களாகிய நீங்கள் யாரும் ஏழை இல்லை. உங்கள் கைகளில் எதிர்காலம் உள்ளது, மாணவர்கள் அனைவரும் லட்சிய நோக்குடனும், சேவை மனப்பான்மையுடனும் நாட்டிற்கு உழைக்க வேண்டும்" என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்