அறிவியல் படைப்பாற்றல் போட்டியில் வெற்றி பெற்றவர்கள்!
திருப்புத்தூர்: திருப்புத்தூர் கிறிஸ்துராஜா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் மண்டல அளவிலான அறிவியல் படைப்பாற்றல் போட்டியில் வெற்றி பெற்றனர். சென்னை அக்னி ஆராய்ச்சி மையம் சார்பில் மண்டல அளவில் பள்ளிகளுக்கிடையே அறிவியல் படைப்புகளுக்காக போட்டிகள் நடத்தினர். சீனியர் பிரிவில், 9ம் வகுப்பு மாணவர்கள் சுதர்ஸன், கணேசன் முதல் இரு இடங்களையும் ஜூனியர் பிரிவில் 8ம் வகுப்பு மாணவர்கள் யாசின் நத்தர், வினோத் முதல் இரு இடங்களையும் வென்றனர். தாளாளர் விக்டர் மாணவர்களை பாராட்டி, பதக்கங்களை அணிவித்தார்.