உள்ளூர் செய்திகள்

சத்துணவு மையம் அமையுமா என எதிர்பார்ப்பு!

அவலூர்பேட்டை: கீழ் செவலாம்பாடியில் சத்துணவு மைய கட்டடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேல்மலையனூர் ஒன்றியம் வடவெட்டி ஊராட்சிக்குட்பட்ட கீழ் செவலாம்பாடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் 63 மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்கான சத்துணவு சமையல் கட்டடம் பழுதடைந்துள்ளது. அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களை இருப்பு வைக்க போதிய அறை வசதி இல்லை. இதனால் மழை நேரத்தில் மிகவும் சிரமப்படும் நிலை உள்ளது. பள்ளி கட்டடத்திற்கு சுற்று சுவர் இல்லாத நிலையில் இரவு நேரத்தில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. சுகாதார சீர்கேடு நிலவும் வகையில் இயற்கை உபாதைகளையும் கழிக்கின்றனர். கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் நலன் கருதி அதிகாரிகள் சத்துணவு மையத்திற்கு கட்டடமும், பள்ளி சுற்று சுவரும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்