கடல்சார் பல்கலையின் ஏழாம் ஆண்டு விழா
சென்னை: சென்னையில் உள்ள, இந்திய கடல்சார் பல்கலைக் கழகத்தின், ஏழாம் ஆண்டு துவக்க விழா நடந்தது. பல்கலைக்கழக துணைவேந்தர் அசோக்வரதன்ஷெட்டி தலைமை தாங்கினார். மணிப்பால் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஹெக்டே, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பல்கலைக்கழக வேந்தர் மோகன் வரவேற்றார். இயக்குனர் ராஜீவாபிரகாஷ் நன்றி கூறினார்.