தென்னிந்திய பட்டய கணக்காளர்கள் மாநாடு துவக்கம்
மதுரை: மதுரையில் 46வது தென்னிந்திய பட்டய கணக்காளர்கள்(சார்ட்டர்டு அக்கவுன்டன்ட்ஸ்) மாநாடு மதுரை கல்லூரி மைதானத்தில் இன்றும், நாளையும் நடக்கிறது. முப்பது ஆண்டுகளுக்குபின் இம்மாநாடு மதுரையில் நடக்கிறது. முதல் நாளில் பட்டய கணக்காளர்களின் அகில இந்திய தலைவர் ரகு பங்கேற்று பேசுகிறார். நாளை (டிச.,13) மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீத்தாராமன், பொன் ராதாகிருஷ்ணன் பங்கேற்று பேசுகின்றனர். இரண்டு நாட்களிலும் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா மாநிலங்கள் உட்பட 41 கிளைகளில் இருந்தும் மூன்று ஆயிரம் பட்டயக் கணக்காளர்கள் மற்றும் சி.ஏ., மாணவர்கள் பங்கேற்கின்றனர். இதில் வருமான வரி, சேவை வரி, பன்னாட்டு வருமான வரி, கம்பெனி சட்டங்கள் லாப நோக்குடன் செயல்படாத சங்கங்கள் எதிர்நோக்கும் வாய்ப்புகள் மற்றும் பிரச்னைகள் குறித்து சிறந்த வல்லுநர்கள் பல்வேறு தலைப்புகளில் பேசுகின்றனர். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி ஆவணி மூல வீதிகளிலும் உடல் வலிமை, உடல் நலம் காப்பதற்காக டிச., 13 அதிகாலை சிறப்பு நடைப்பயிற்சி நடக்கிறது.