உள்ளூர் செய்திகள்

பள்ளி இணையதளத்தை முடக்கினர் ஐஎஸ் பயங்கரவாதிகள்

புதுடில்லி: டில்லியின் ரோஹினி பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றின் இணையதளம் மர்மநபர்களால் முடக்கப்பட்டு, அதில் ஐஸ் பயங்கரவாத அமைப்பின் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. நவம்பர் 30ல் இப்பள்ளியின் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பள்ளிக்கு சர்வதேச எண்ணில் இருந்து தொலைப்பேசி அழைப்பு வந்துள்ளது. அதில், அரபு மொழியில் பேசிய மர்ம நபர் பள்ளியின் உரிமையாளர் மற்றும் முதல்வருக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரை அடுத்து சைபர் கிரைம் போலீசாருடன் இணைந்து, டில்லி போலீசார் இவ்வழக்கை விசாரித்து வருகின்றனர்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்