‘பள்ளிகள் மீது தாக்குதல் நடத்த திட்டம்‘
புதுடில்லி: பள்ளிகள் மற்றும் ஓட்டல்கள் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளதை அடுத்து அனைத்து மாநிலங்களிலும் உள்ள பள்ளிகள், பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவைகளில் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவிற்கு அமெரிக்கா அனுப்பி உள்ள உளவுத்துறை தகவல் மற்றும் இந்திய உளவுத்துறை தகவலின்படி, மும்பை தாக்குதல் போன்று மற்றொரு மிகப் பெரிய தாக்குதலை இந்தியாவில் நிகழ்த்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.