உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த விளையாட்டு விழா

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையத்தில், மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த விளையாட்டு விழா நடந்தது. பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய வளாகத்தில், 14க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் உள்ளன. இங்குள்ள பள்ளிகளில் படிக்கும் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த விளையாட்டு விழா, ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய மாருதி உடற்கல்வியியல் கல்லுாரி மைதானத்தில் நடந்தது. போட்டியில் கை,கால் குறைபாடு உடைய, பார்வையற்ற, மனவளர்ச்சி குன்றிய, 70 மாற்றுத்திறன் குழந்தைகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், உதவியாளர்களின் துணையுடன், 25 மீ., 50 மீ., ஓட்டப் போட்டிகள், எறிபந்து, பந்துகளை உருட்டி இலக்கை அடைதல், பந்தை தொடர்ந்து தரையில் அடித்தல் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட போட்டிகள் நடந்தன. இதில், பங்கேற்ற குழந்தைகளுக்கு ஊக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்