உள்ளூர் செய்திகள்

உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான மேம்படுத்துதல் பயிற்சி

சாத்தூர்: அனைவருக்கும் கல்வி இயக்கம் சாத்தூர் வட்டார வளமைய சார்பில் உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான அறிவியல் சோதனைகள் மற்றும் செயல் திட்டங்கள் மேம்படுத்துதல் பயிற்சி, படந்தால் அரசு மேல்நிலைப் பள்ளியில், மூன்று நாட்கள் நடந்தது. கூடுதல் கல்வி அலுவலர் பால்ராஜ் துவக்கி வைத்தார். கருத்தாளர்கள் கிருஷ்ணவேணி, மிதிலைகுமாரி ஆகியோர் இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல் பாடங்களில் இருந்து ஆசிரியர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் சிறிய, எளிய அறிவியல் பரிசோதனைகளை செய்து காட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்