பள்ளி மாணவர்களுக்கு ஆதார் அட்டை முகாம்
மதுரை: பள்ளி மாணவர்களுக்கு ஆதார் அட்டை வழங்கும் வகையில், மதுரை ஈ.வெ.ரா., மாநகராட்சி பள்ளியில் கலெக்டர் சுப்பிரமணியன் சிறப்பு முகாமை துவக்கி வைத்தார். அவர் பேசுகையில், மாவட்டத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் பதிவு செய்வதற்கு பள்ளி மாணவர்களுக்கு கருவிழி, கைரேகை மற்றும் புகைப்படம் எடுக்கும் சிறப்பு முகாம், ஒருமாதம் நடக்கும். முதற்கட்டமாக, 10 பள்ளிகளில் இம்முகாம் நடக்கிறது. கடந்த 2 ஆண்டுகளில், 84.17 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன. டிச.,க்குள் 100 சதவீத பணிகள் முடியும், என்றார். மாநகராட்சி கமிஷனர் சாந்தி, தாசில்தார் செந்தில்குமார், முதன்மைக் கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி பங்கேற்றனர்.