உள்ளூர் செய்திகள்

பாரதியார் பல்கலைதுணை வேந்தர் பணி நிறைவு

கோவை: பாரதியார் பல்கலை துணைவேந்தர் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்ததை தொடர்ந்து, சிண்டிகேட் உறுப்பினர்கள் இருவர், துணைவேந்தர் பதவிக்கான பொறுப்புகளை ஏற்றுக் கொண்டுள்ளனர்.பாரதியார் பல்கலை துணைவேந்தராக, 202 செப்.,21 முதல் பதவி வகித்த ஜேம்ஸ் பிச்சையின் பதவிக்காலம், நேற்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, பல்கலை சிண்டிகேட் உறுப்பினர்களான, ஈரோடு சிக்கைய நாயக்கர் கலைக்கல்லுாரி பேராசிரியர் கமலக்கண்ணன், பொள்ளாச்சி கமலம் கலை அறிவியல் கல்லுாரி செயலாளர் இளங்கோ ஆகியோர், துணைவேந்தர் பதவிக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டனர். புதிய துணைவேந்தர் நியமிக்கப்படும் வரை, இவர்கள் இருவரும் துணைவேந்தர் பதவிக்குரிய பொறுப்புகளை கவனித்துக்கொள்வர் என, பல்கலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்