சென்னை ஆர்.கே.நகரில் புதிய அரசு கல்லூரி
சென்னை: சென்னை, ஆர்.கே.நகரில், புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி துவக்கப்படும், என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். சட்டசபையில், 110வது விதியின் கீழ், அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தேனி, ஈரோடு, கன்னியாகுமரி மாவட்டங்களில், புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் துவக்கப்படும். தேனி - வீரபாண்டி; ஈரோடு - சத்தியமங்கலம்; கன்னியாகுமரி - நாகர்கோவிலில் அமையும், இந்தப் புதிய கல்லுாரிகளுக்கு தலா, 8.48 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்சென்னை ஆர்.கே.நகரில், புதிய அரசு கலை, அறிவியல் கல்லுாரி துவக்கப்படும். இதற்கு, 8.48 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்புதிய அரசு கல்லுாரிகள் துவக்கப்படுவதன் மூலம், தமிழகத்தில், அரசு கலைக் கல்லுாரிகள் இல்லாத, மாவட்டமே இல்லை என்ற நிலை உருவாகும்