உள்ளூர் செய்திகள்

சிவில் சர்வீஸ் தேர்விற்கு படித்ததால் சாதனை!

புதுச்சேரி: சிவில் சர்வீஸ் தேர்விற்கான பாடங்களை படித்ததால் யு.டி.சி.,தேர்வில் சாதிக்க முடிந்தது என, யு.டி.சி., தேர்வில் முதலிடம் பிடித்த ராஜேந்திரன் தெரிவித்தார். புதுச்சேரியில்  பட்டதாரிகள் எழுதிய யு.டி.சி., போட்டி தேர்வில் நெல்லித்தோப்பு டி.நகர்., 3வது குறுக்கு தெருவை சேர்ந்த ராஜேந்திரன் 64.75 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பிடித்து சாதித்துள்ளார். இவரது அண்ணன் கார்த்திக் 21வது இடத்தை பிடித்து யு.டி.சி., தேர்வில் வெற்றிப் பெற்றுள்ளார். இதனால் குடும்பத்தினர் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளனர். ராஜேந்திரன் கூறுகையில், தந்தை சுந்தர்ராஜன் மலேரியா தடுப்பு திட்டத்தின் உதவி இயக்குனராகவும், தாய் மாலினி, கதிர்காமம் அரசு பெண்கள் பள்ளியில் ஆசிரியராகவும் உள்ளனர். பள்ளி படிப்பை, பெத்திசெமினார் மேல்நிலைப் பள்ளியிலும், புதுச்சேரி அரசு பொறியியல் கல்லுாரியில் பி.டெக்., இ.சி.இ., படிப்பையும் முடித்தேன். நன்றாக படித்தால் கேம்பஸ் இண்டர்வியூவில் செலக்ட் ஆக வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும் ஐ.ஏ.எஸ்.,படிக்க வேண்டும் என்பது லட்சிய கனவு என்பதால் எங்கும் வேலைக்கு செல்லவில்லை. பல மாதங்களாக சிவில் சர்வீசஸ் தேர்விற்கு தயாராகி வந்த போது யு.டி.சி., போட்டி தேர்வு வந்தது. அண்ணன் கார்த்திக், நானும் போட்டி போட்டு தேர்வுக்கு தயாராகினோம். இருவருமே வெற்றிப் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. சிவில் சர்வீஸ் தேர்விற்கான பாடங்களை படித்ததால் யு.டி.சி., தேர்வில் முதலிடம் பிடித்து சாதிக்க முடிந்தது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்