உள்ளூர் செய்திகள்

ஐ.ஐ.டி., மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி

சென்னை ஐ.ஐ.டி.,யில், 20 மாணவர்களுக்கு, டெங்கு பாதிப்பு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஐ.ஐ.டி., வளாகத்தில் தங்கிப் படிக்கும் மாணவர்கள், 20 பேர், ஒரு வாரமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, உள்வளாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.அவர்களுக்கு நடத்தப்பட்ட ரத்த பரிசோதனையில், டெங்கு காய்ச்சல் அறிகுறி ஆரம்ப கட்டத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. எனவே, மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது; சிலருக்கு விடுப்பு அளித்து, ஊருக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதையடுத்து, ஐ.ஐ.டி., வளாகத்தில், சென்னை மாநகராட்சி சார்பில், டெங்கு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டுள்ளது. டெங்கு அறிகுறி தெரிந்தால், உடனடி சிகிச்சைக்காக, நிலவேம்பு கஷாய பவுடர் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.ஐ.ஐ.டி.,யின் மாணவர் நலத் துறை முதல்வர் சிவகுமார் கூறுகையில், டெங்கு பாதிப்பு யாருக்கும் ஏற்படவில்லை. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கையாக, நாங்களே டெங்கு விழிப்புணர்வு முகாம் நடத்தியுள்ளோம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்