நேரு பல்கலை., நாட்டிற்கு எதிரானது; ஆர்.எஸ்.எஸ்.,
புதுடில்லி: டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை.,க்கு எதிராக ஆர்.எஸ்.எஸ்., பத்திரிக்கையான பாஞ்சஜன்யாவில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில், நேரு பல்கலைக்கழகம் நாட்டிற்கும், இந்துக்களுக்கும் எதிரானது. அந்த பல்கலை.,யில் நக்சல் இயக்கத்தை சேர்ந்தவர்களே மாணவர்களாக உள்ளனர். நக்சல் தாக்குதல்களால் பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டதை மாணவர்கள் வெளிப்படையாக கொண்டாடுகின்றனர் என குறிப்பிடப்பட்டுள்ளது. நவம்பர் 2ம் தேதி வெளியிடப்பட்ட இந்த கட்டுரையால் புதிய சர்ச்சை கிளம்பி உள்ளது. இந்த கட்டுரைக்கு பல்கலை., நிர்வாகம் கண்டனர் தெரிவித்துள்ளது.