உதவித் தொகை வழங்க நாளை நேர்காணல்
புதுச்சேரி: புதுச்சேரி அருண்சர்மா தொண்டு நிறுவனம் சார்பில் உதவித் தொகை வழங்க நேர்காணல் வரும் நாளை நடக்கிறது. குழு தலைவர் பிரபாதேவி கூறியதாவது: உழவர்கரை தொகுதி மக்களுக்கு 3 ஆண்டுகளாக அருண் சர்மா தொண்டு நிறுவனம் சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு இந்த ஆண்டு (2015-16) உதவித் தொகை வழங்க நேர் காணல் வரும் 8 ம் தேதி காலை 10:00 மணி முதல் 1:00 மணி வரை உழவர்கரை தொகுதியில் உள்ள கம்பன் நகர், 5 வது குறுக்குத் தெருவில் உள்ள அருண்சர்மா தொண்டு நிறுவன அலுவலகத்தில் நடக்கிறது. தொண்டு நிறுவன நிறுவனர் வீரராகு முன்னிலையில் நடக்கும் நேர்காணலில் தகுதியுடைய மாணவர்களுக்கு அன்றே டோக்கன் வழங்கப்படும். அதனை பெற்று கல்வி உதவித் தொகை பெறலாம்.