உள்ளூர் செய்திகள்

வி.ஏ.ஓ., தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம்

கரூர்: கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில், வி.ஏ.ஓ., தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம், கரூர் நகராட்சி குமரன் உயர்நிலைப்பள்ளியில் நேற்று துவங்கியது. தமிழக வருவாய் துறையில் காலியாக உள்ள, 813 வி.ஏ.ஓ., பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு, வரும் பிப்ரவரி, 28ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, மாநிலம் முழுவதும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம், இலவச பயிற்சி வகுப்புகள் நடந்து வருகிறது. கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம், கரூர் நகராட்சி குமரன் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் நேற்று பயிற்சி முகாம் துவங்கியது. முகாமை, டி.ஆர்.ஓ., அருணா துவக்கி வைத்தார். அதை தொடர்ந்து ஜெய்ராம் கல்லூரி முதல்வர் சந்திரமோகன், வி.ஏ.ஓ., தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளவர்ளுக்கு பயிற்சி அளித்தார். பயிற்சி முகாம் வரும் பிப்ரவரி, 7ம் தேதி வரை வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் நடக்கிறது. முகாமில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அடைக்கண், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் சண்முகம் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்