உள்ளூர் செய்திகள்

உதவித்தொகை விவரங்களை பதிவேற்றம் செய்ய உத்தரவு

சேலம்: அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், 9ம் வகுப்பு படிக்கும் மாணவியருக்கு, 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத் திட்டத்துக்கான விபரங்களை சேகரித்து, ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 9ம் வகுப்பு படிக்கும் எஸ்.சி., எஸ்.டி., மாணவியருக்கு மத்திய அரசின் உதவித்தொகை திட்டத்தில், 3,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதற்காக, நடப்பு கல்வியாண்டில், 9ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் எஸ்.சி., எஸ்.டி., மாணவியருக்கு, விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதை பூர்த்தி செய்து, அவற்றை மத்திய அரசு இணையதளத்தில், பதிவேற்றம் செய்யும் படி அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதில், ஒவ்வொரு மாணவியரின் ஆதார் எண்ணும் அவசியம் சேகரித்து பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உதவித்தொகை மத்திய அரசால், நேரடியாக மாணவியரின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்