பள்ளிகளில் மாணவர் திறன் அறியும் சோதனை
வேடசந்தூர்: அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் கல்வி திறனை அறிய அடைவுத்திறன் சோதனை தேர்வு நடந்தது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. அரசு,அரசு உதவி பெறும் பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து அறிய மாணவ, மாணவிகளுக்கு அடைவு திறன் சோதனை தேர்வு நடத்த துவங்கியுள்ளது. குஜிலியம்பாறை ஒன்றியத்தில் ஆர்.கோம்பை, பில்லக்காபட்டி, பில்லமநாயக்கன்பட்டி, கூம்பூர்-புதூர், செட்டியூர், ராமகிரி, பாளையம் ஆகிய இடங்களில் துவக்க, நடுநிலை, உயர்- மேல்நிலை பள்ளிகள் உள்ளன.இங்கு 3,5,8 ம் வகுப்பு மாணவர்கள் என, மொத்தம் 27 பள்ளிகளில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு இத்தேர்வு நடந்தது.இதை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பாண்டியராஜன்,உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் தமிழ்செல்வி, ஜான்சன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.