உள்ளூர் செய்திகள்

தென்னிந்திய குங்பூ போட்டிதேனி மாணவிகள் சாதனை

தேனி: பெங்களூருவில் நடந்த தென்னிந்திய குங்பூ போட்டியில், தேனி நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவிகள் நால்வர் தங்கம் வென்றனர். தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரியைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் இப்போட்டியில் பங்கேற்றனர். இதில், தேனி நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவிகள் சொக்கர்மீனா, கே.திவ்யா, பி.திவ்யா, மோன்ஷி ஆகியோர் பல்வேறு பிரிவுகளில் முதலிடம் பிடித்து தங்கம் வென்றனர். இதன் மூலம் இவர்கள் ஓசூரில் ஜன.,30,31ல் நடக்கும் தேசிய போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் பெற்ற இவர்களுக்கு கிருஷ்ணகிரி எஸ்.பி., திருநாவுக்கரசு கேடயம், சான்றிதழ் வழங்கினார். இம்மாணவிகளை கல்லுாரி நிர்வாகத்தினர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்