உள்ளூர் செய்திகள்

இடை நின்ற மாணவர்கள் கணக்கெடுப்பு துவக்கம்

ராசிபுரம்: நாமகிரிப்பேட்டையில் இடை நின்ற மாணவர்கள் கணக்கெடுக்கும் பணி துவங்கியது. நாமகிரிப்பேட்டை வட்டார வளமையம் சார்பில், 2016-17ம் கல்வி ஆண்டுக்கான இடை நின்ற மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி துவங்கியது. கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் அருள்மணி, மேற்பார்வையாளர் லதா ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், 6 முதல், 14 வயதுடைய பள்ளியில் சேராமல், இடை நின்றல், மாற்றுத்திறனாளி குழந்தைகள் குறித்து கணக்கெடுப்பு நடக்கிறது. இந்த பணி, வரும், 25 ம் தேதி வரை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்