உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு சிறந்த என்.சி.சி.,மாணவர் விருது

புதுச்சேரி: திரு.வி.க., அரசு உயர்நிலைப் பள்ளியின் என்.சி.சி.,மாணவர்கள் ஜீவேஸ்வரன், சதிஷ் ஆகியோர்களுக்கு 2014-15 மற்றும் 2015-16 கல்வியாண்டிற்கான, புதுச்சேரி என்.சி.சி., மண்டல அளவிலான சிறந்த என்.சி.சி., மாணவர்களுக்கான விருது வழங்கப்பட்டது. விருதுடன் ரொக்க பரிசாக 2,500 ரூபாய் காசோலையை புதுச்சேரி என்.சி.சி.,மண்டல கமாண்டர் கர்னல் அனில் நாட்டியால் வழங்கினார். நிகழ்ச்சியில், புதுச்சேரி என்.சி.சி.,தரைப்படை பிரிவு கமாண்டர் லெப்டினன்ட் கர்னல் மோகித் பூரி வாழ்த்தி பேசினார். இருந்த சிறந்த என்.சி.சி.,மாணவர்களுக்கான விருது, புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம், கடலுார், விழுப்புரம் மாவட்டங்களை உள்ளடக்கிய வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து என்.சி.சி., விருது வென்ற பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் நந்தகுமார் பாராட்டினார். நிகழ்ச்சியில் என்.சி.சி.,அதிகாரி ராஜாராம், பள்ளி துறை தலைமையாசிரியர் செல்வராசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்