பள்ளி கட்டடம் சேதம்; மாணவர்களுக்கு ஆபத்து
மகுடஞ்சாவடி: மகுடஞ்சாவடி அருகே உள்ள, அரசு மாதிரி பள்ளியில், 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். அந்த பள்ளியின் பெரும்பாலான கட்டடங்கள், விரிசல் ஏற்பட்டும், சிமென்ட் தளங்கள் பெயர்ந்தும் காட்சியளிக்கிறது. முன்னதாக, இந்த பள்ளியில் ஒரு வகுப்பறை இடிந்து விழுந்தது. இதனால், அங்கு படிக்கும் மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. எனவே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, அந்த கட்டடங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை, மாணவர்களை வேறு இடத்தில் அமர்ந்து படிக்க, ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.