உள்ளூர் செய்திகள்

விடைத்தாள் திருத்துவோருக்கு உள்ளூர் விடுமுறை இல்லையா?

மதுரை: மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சிக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு விடைத் தாள்கள் திருத்தும் ஆசிரியர்களுக்கு விடுமுறை இல்லை, என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க செயலாளர் பிரபாகரன், தமிழாசிரியர் கழக செயலாளர் ஜெயகொடி கூறியதாவது: கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு மட்டும் அன்று விடுமுறை உண்டா இல்லையா என இருவேறு கருத்துக்கள் உள்ளன. அன்று விடுமுறை அளிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்