உள்ளூர் செய்திகள்

உலக கால்பந்து போட்டிதேர்வில் திண்டுக்கல் வீரர்

திண்டுக்கல்: இந்தியாவில் 2017ல் நடக்க உள்ள 17 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்க திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு வீரர் பொன்பாண்டி தேர்வாகியுள்ளார்.பதினெழு வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டி முதல் முறையாக 2017ல் இந்தியாவில் நடக்க உள்ளது.உலக கோப்பை போட்டியில் பங்குபெற உள்ள இந்திய அணி விளையாட்டு வீரர்கள் தேர்வு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடக்க உள்ளது.இதற்கான முதற்கட்ட தேர்வு திண்டுக்கல், மதுரை,தேனி, விருதுநகர் மாவட்ட வீரர்களுக்கு கடந்த பிப்ரவரியில் திண்டுக்கல்லில் நடந்தது. இதில் பொன்பாண்டி தேர்வானார். இவர் திருவனந்தபுரத்தில் நடக்க உள்ள தேர்வில் பங்கேற்க உள்ளார். இதேபோல தமிழகத்தில் இருந்து 7 பேர் தேர்வாகியுள்ளனர். பொன்பாண்டியை, மாநில கால்பந்து கழக துணை தலைவர் சுந்தரராஜன், மாவட்ட செயலர் சண்முகம் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்