உள்ளூர் செய்திகள்

இன்ஜி., கவுன்சிலிங்; விரைந்து விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

இதுவரை, ’ஆன்லைன்’ மூலம், 2.38 லட்சம் பேர் தங்கள் பெயர், விவரங்களை பதிவு செய்துள்ளனர். அவர்களில், 1.70 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்ப கட்டணம் செலுத்தி பதிவு செய்துள்ளனர். மே, 31ம் தேதி வரை மட்டுமே, ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்ய முடியும். பதிவு செய்தவர்கள் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி, ஜூன், 4ம் தேதிக்குள் அண்ணா பல்கலைக்கு விண்ணப்ப பிரதியை அனுப்ப வேண்டும். எனவே, ஆன்லைன் விண்ணப்ப பதிவுக்கு, இன்னும், மூன்று நாட்களே அவகாசம் உள்ளது. அதற்குள் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என, பல்கலை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்