உள்ளூர் செய்திகள்

பள்ளிகள் திறக்கப்படுவதால் பழநியில் குவிந்த பக்தர்கள்

பழநி: கோடைவிடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க உள்ளதால் நேற்று ஞாயிறு பழநியில் பக்தர்கள் குவிந்தனர். இதனால் மலைக்கோயிலில் 4 மணிநேரம் காத்திருந்து சுவாமிதரிசனம் செய்தனர். கோடை விடுமுறையை முன்னிட்டு பழநி மலைக்கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்தனர். ஜூன் 1ல் பள்ளிகள் திறக்க உள்ளதால் நேற்று ஏராளமான வெளியூர் பக்தர்கள் தீர்த்தக்குடங்கள்,காவடிகள், பால்குடங்கள் உடன் குவிந்தனர். இதனால் வின்ச், ’ரோப்கார்’ ஸ்டேஷன்களில் 2 மணிநேரம் வரை காத்திருந்து மலைக் கோயிலுக்கு சென்றனர். வெளிப்பிரகாரம் வரை நீண்ட வரிசையில் 4 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் பொதுதரிசன வழியில் மூலவர் ஞானதண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்தனர். இதைப் போலவே இரவு 7 மணிக்கு தங்கரதப் புறப்பாட்டை காண ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்