மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கவுன்சிலிங்
சென்னை: அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங், சென்னையில் ஜூன் 29ம் தேதி நடந்தது. 350க்கும் மேற்பட்டோர், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு செய்யப்பட்டனர். மாநிலம் முழுவதும் 405 மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளன. கவுன்சிலிங் துவங்குவதற்கு முன், காலியிட பட்டியல் வெளியிடப்பட்டது. பணி மூப்பு அடிப்படையில், தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் தனித்தனி குழுவாக அழைக்கப்பட்டு, அவர்கள் விரும்பிய இடங்களில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவுகளை இயக்குனர் வழங்கினார். மொத்தம் 350க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு உத்தரவுகள் வழங்கப்பட்டன. தகுதி இருந்தும் கவுன்சிலிங்கில் பங்கேற்காதவர்களுக்கு, மீதமுள்ள காலி பணியிடங்களில் பணி நியமனம் செய்து உத்தரவுகள் தபாலில் அனுப்பப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.