ஆசிரியர் பயிற்சியில் சேர திருச்சியில் கவுன்சிலிங்
அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் மற்றும், தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 21 ஆயிரத்து 595 உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான கவுன்சிலிங், திருச்சியில் உள்ள நான்கு மையங்களில் துவங்குகிறது. கவுன்சிலிங்கிற்கு அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக, ஆசிரியர் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பத்து நாட்கள் வரை கவுன்சிலிங் நடைபெறலாம் என தெரிகிறது.