உள்ளூர் செய்திகள்

மாணவர் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை

மாணவர்கள் கல்வி நிறுவனங்களில் சேர்ந்திடும் விகிதத்தை ஒட்டு மொத்த சேர்க்கை விகிதம், அதாவது எணூணிண்ண் உணணூணிடூட்ஞுணt கீச்tடிணி, எனக் கூறுகிறார்கள். 11வது ஐந்தாண்டுத் திட்டத்தில் இந்த விகிதத்தை 5 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. அதற்காக, இதுவரை நடைமுறையில் இல்லாத மாநிலங்களிலும் மத்திய பல்கலைக்கழகங்களை நிறுவிட மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஐ.ஐ.எஸ்.சி.ஆர்., ஐ.ஐ.ஐ.டி., ஸ்கூல் ஆப் பிளானிங் அண்ட் ஆர்க்கிடெக்சர் போன்ற கல்வி நிறுவனங்கள் இந்த ஒட்டு மொத்தப் பதிவு விகிதத்தை மேம்படுத்திடும் நோக்கிலேயே ஏற்படுத்தப்பட்டன. இந்திய உயர்கல்விப் பிரிவிலிருக்கும் ஜி.இ.ஆர்., விகிதமானது 12.4 சதவீதமே உள்ளது. உலகின் சராசரி ஜி.இ.ஆர்., விகிதமானது 26 சதவீதம் ஆகும். மத்திய கல்வி நிறுவனங்கள் (இட ஒதுக்கீடு) சட்டம் 2006ன் படி மத்திய கல்வி நிறுவனங்களை விரிவுபடுத்தி அவற்றின் இடங்களை 54 சதவீதம் உயர்த்தும் முயற்சிகளும் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவின் வளர்ச்சி என்பது கல்வி மேம்பாட்டில் தான் இருக்கிறது என்று மத்திய அரசு திட்டவட்டமாக நம்புகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்