உள்ளூர் செய்திகள்

பாதுகாப்பற்ற பள்ளி போக்குவரத்துக்குக் கண்காணிப்புக் குழு

ஆட்டோக்களில் கோழிக்குஞ்சுகளைப் போல சீருடை அணிந்த பிஞ்சுக் குழந்தைகள் பயணிப்பது சென்னையில் சர்வசாதாரணமாகிவிட்டது. அடையாறில் சில மாதங்களுக்கு முன், ஜெயஸ்ரீ என்ற எட்டு வயது பள்ளிச் சிறுமி சாலையைக் கடக்க முற்படும்போது, அவளை இற்ககிவிட்ட வாகனத்திலேயே அடிபட்டு இறந்தார். இதேபோல, விழுப்புரம் அருகே பள்ளி வேன் ஒன்று நிலைதடுமாறி தலைகுப்புற கவிழந்ததில் 30 மாணவ, மாணவியர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். வீட்டிலிருந்து பள்ளிக்கும் பள்ளி முடிந்து வீட்டுக்கும் செல்லும் போக்குவரத்து முறை பாதுகாப்பில்லாமல் உள்ளது. சென்னையில் உள்ள 900க்கும் மேற்பட்ட பள்ளிகளில் அனுமதி பெற்று 850 பள்ளி பஸ்கள் இயங்குகின்றன. 5 ஆயிரத்திற்கு அதிகமான மேக்சிகேப் வேன்கள் தனியாரால் இயக்கப்படுகின்றன. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் காலையிலும் மாலையிலும் பகுதி நேரமாக பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லுகின்றன. பள்ளி நிர்வாகமோ பள்ளிக் குழந்தைகள் தங்களது பள்ளியின் படிக்கட்டுகளைவிட்டுக கீழே இறங்கிவிட்டால் தங்களது பொறுப்பு முடிந்து விட்டது என்று கருதுகிறது. பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்ல முன்அனுமதி பெற்று  மஞ்சள் வண்ணம்பூசி, பள்ளிக் குழந்தைகள் வாகனம் என்று எழுதியிருக்க வேண்டும். ஆட்டோவில் ஐந்து குழந்தைகளுக்கு மேல் ஏற்றக்கூடாதுஎன்பது அரசு வகுத்த விதிமுறை. இதை யாரும் பின்பற்றுவதில்லை.10க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆட்டோவில் திணிக்கப்படுகின்றனர். மும்பையில் கடந்த ஆண்டு ஜனவரியில், ஆம்னி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்து, மூன்று குழந்தைகள் உடல் கருகி இறந்தனர். பலர் படுகாயமடைந்தனர். அந்த வேனில் உரிய ஆவணங்களும் இல்லை. பள்ளிப் போக்குவரத்துக்குரிய அனுமதியும் பெறவில்லை என்பது விசாரணையில் தெரியவந்தது. அளவுக்கு அதிகமான குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களை பெற்றோரும் பள்ளி நிர்வாகமும் மட்டுமல்ல போக்குவரத்துப் போலீசாரும் கண்டுகொள்வதில்லை. இந்த நிலையைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்