எம்.எஸ்சி., மெடிக்கல் பிசிக்ஸ் மாணவர் சேர்க்கை
காஞ்சிபுரம் மாவட்டம், காரப்பேட்டையில் உள்ள அரசு அண்ணாதுரை நினைவு புற்றுநோய் ஆராய்ச்சி மையம் மற்றும் மருத்துவமனையில், எம்.எஸ்சி., மருத்துவ இயற்பியல் (மெடிக்கல் பிசிக்ஸ்) படிப்பு வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பப் படிவத்தை www.tnhealth.org, www.tn.gov.in ஆகிய இணையதளங்களில் டவுண்லோடு செய்து கொள்ளலாம். இயற்பியலில் பி.எஸ்சி., பட்டம் பெற்றவர்கள் இப்படிப்பில் சேரலாம். விண்ணப்பக் கட்டணமாக 1,000 ரூபாய் செலுத்த வேண்டும். இப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை வரும் 12ம் தேதி மாலை 5 மணிக்குள், மருத்துவக் கல்வி இயக்குனரகத்திற்கு அனுப்ப வேண்டும். கவுன்சிலிங்கில் இப்படிப்பை தேர்வு செய்பவர்கள், கல்விக் கட்டணமாக 20 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்.