உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் தேர்வு
சென்னை: தொடக்க கல்வி இயக்ககத்தின் உதவி தொடக்க கல்வி அலுவலர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 67 பேர் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பு:ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தொடக்க கல்வி இயக்ககத்தின் 67 உதவி தொடக்க கல்வி அலுவலர்களை போட்டி எழுத் துத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்க, 47 ஆயிரத்து 453 பேரிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், தகுதியுள்ள 46 ஆயிரத்து 968 விண்ணங்கள் ஏற்கப்பட்டு, தேர்வுக்கான நுழைவுச் சீட்டு அனுப்பப்பட்டது. போட்டி எழுத்துத் தேர்வில் 42 ஆயிரத்து 252 பேர் கலந்து கொண்டனர். மதிப்பெண் மற்றும் இனச் சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்பட் 67 பேர் பட்டியல், www.trb.tn.nic.in இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட 67 பேருக்கு, வரும் 28ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்தில் சான்றிதழ் சரிபார்த்தல் பணி நடக்கவுள்ளது. இதற்கான கடிதம் தனித்தனியாக அனுப்பி வைக்கப்படும்.