உள்ளூர் செய்திகள்

பல்கலை கல்லுாரியில் கூடுதல் பிரிவு எதிர்பார்ப்பு

பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் நாள் முகாமில், கொடுத்த மனு வருமாறு:தி.மு.க., நகர முரசொலி மன்றத்தின் மனுவில், &'பொள்ளாச்சியிலுள்ள பாரதியார் பல்கலை கல்லுாரியில், ஐந்து பாடப்பிரிவுகள் மட்டுமே உள்ளன. கல்வி மாவட்டத்தில் உயர் கல்விக்காக கல்லுாரியில் சேர விரும்பும் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில், கூடுதல் பாடப்பிரிவுகளை துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,&' என, வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்