ஹிந்தி படிக்க விருப்பமா? சர்ச்சையில் மாநகராட்சி!
பள்ளி மாணவர் சேர்க்கை படிவத்தில், &'ஹிந்தி மொழி படிக்க விருப்பமா&' என கேட்கப்பட்டதாக பரவிய, &'வாட்ஸ் ஆப்&' தகவலால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நாடு முழுதும், புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. புதிய கல்வி கொள்கையில், மும்மொழி கொள்கை பின்பற்றப்படுவதால், தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், கோவை மாநகராட்சி நிர்வாகத்துக்கு உட்பட்ட பள்ளிகளில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவத்தில், &'மூன்றாம் மொழியாக ஹிந்தி படிக்க விருப்பமா அல்லது கைத்தொழில் ஒன்றை கூடுதலாக கற்க விருப்பமா&' என்ற கேள்வி உள்ளதாக, &'வாட்ஸ் ஆப்&'பில், நேற்று தகவல் பரவியது.&'தமிழகத்தில், புதிய கல்வி கொள்கை தொடர்பாக, அரசு எந்த முடிவும் எடுக்காத நிலையில், மாநகராட்சி பள்ளியில், எப்படி இந்த விண்ணப்ப படிவம் தயாரிக்கப்பட்டது; ஹிந்தியை திணிக்க முயற்சி நடக்கிறதா&' என, ஒரு தரப்பினர் விமர்சனம் செய்தனர்.இந்நிலையில், வாட்ஸ் ஆப்பில் வந்த விண்ணப்ப படிவம் போலியானது என்றும், கோவை மாநகராட்சி சார்பில், இதுபோன்ற விண்ணப்ப படிவம் எதுவும் அச்சடிக்கப்படவில்லை என்றும், மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.