சிறுவர்களுக்கு சிலை வடிக்க உதவிய ஆன்மிகமலர்
கன்னிவாடி; திண்டுக்கல் மாவட்டம் கரிசல்பட்டி அருகே பழைய கன்னிவாடியை சேர்ந்த மாணவர்கள் அன்பரசன் 12, தீனதயாளன் 14. இருவரும் சதுர்த்தி வழிபாட்டிற்காக, தினமலர் ஆன்மிகமலர் புத்தகத்தில் உள்ளவிநாயகர் படங்களைக் பார்த்து களிமண் சிலை செய்தனர்.இருவரும் கூறுகையில், &'வழிபாட்டு முறைகளை தெரிந்து கொள்ள தினமலர் ஆன்மிகமலர் உதவியது. சதுர்த்திக்கு விநாயகரை வைத்து வழிபட, ஆன்மிக மலர் புத்தக படங்களைக் கொண்டு சிலைகளை தயாரித்தோம்,&' என்றனர்.