மினி பஸ், வேன்களில் குவிந்த மாணவர்கள்
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள், அடுத்து வர இருக்கும் பொதுத்தேர்வை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்த, தினமலர் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி, திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் என்.டி.பி., திருமண மண்டபத்தில் நடந்தது.அதிகாலை முதல் மாணவ, மாணவியர் நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்திற்கு குவியத் துவங்கினர். ஊத்துக்கோட்டை அடுத்த கச்சூர் கிரைஸ்கிங் உயர்நிலைப் பள்ளியில் இருந்து ஆசிரியர்கள் பாலு, ராம்பாபு ஆகியோர் தலைமையில் 41 மாணவ, மாணவியர் மினி பஸ்சில் வந்தனர்.பேரம்பாக்கம் அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியில் இருந்து, ஆசிரியர் சேகர் தலைமையில் 82 மாணவ, மாணவியரும், சேவாலயா பள்ளியில் இருந்து ஆசிரியர் விஜயராகவன் மற்றும் 38 மாணவர்களும் தனியார் வேனில் வந்தனர். பென்னலூர்பேட்டை அரசு மேனிலைப் பள்ளியில் இருந்து 45 மாணவர்கள், ஸ்ரீபெரும்புதூர் அரசு பள்ளியில் இருந்து 13 மாணவர்கள், மணவூர் உயர்நிலைப் பள்ளியில் இருந்து ஆசிரியர்கள் குப்புசாமி, மீனாட்சி சுந்தரம் ஆகியோருடன் 99 மாணவர்கள் வந்தனர். வெங்கல் அரசு உயர்நிலைப் பள்ளியில் இருந்து ஆசிரியர் சுப்பிரமணி தலைமையில் 101 மாணவ, மாணவியர், கூவம் அரசு உயர்நிலைப் பள்ளியில் இருந்து 29 மாணவர்கள், கிளாம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் இருந்து 30 மாணவ, மாணவியர் வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து கடும் பனியையும் பொருட்படுத் தாமல், ஏராளமான மாணவ, மாணவியர் குவிந்தனர். குறிப்பாக, ஊத்துக் கோட்டை, கச்சூர், பாலவாக்கம், பெரியபாளையம், வெங்கல், பேரம் பாக்கம் அடுத்த பன்னூர், திருப்பந்தியூர், உளுந்தை, கூவம், பெரியகளக் காட்டூர் மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் கிராமங்களில் இருந்தும் ஏராளமான மாணவ, மாணவியர் தங்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்து கொண்டனர்.