அண்ணா பல்கலை மாணவர்களுக்கு ஆன்லைனில் மறுதேர்வு
பிப்ரவரியில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாக மாணவர்கள் புகார் கூறியதன் எதிரொலியாக, பிப்ரவரி 2021ல் நடைபெற்ற தேர்வுகளுக்கு பதில் மறுதேர்வு தேர்வு நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.இந்தத் தேர்வு ஆன்லையில் 3 மணி நேரம் நடைபெறும். மாணவர்கள் தேர்வுக்கான கட்டணம் செலுத்த தேவையில்லை. பிப்ரவரி மாதம் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அதிக மார்க் பெற விரும்பினால், மீண்டும் தேர்வு எழுதலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.