ஆன்லைன் தேர்வுக்கு தயாராக அறிவுறுத்தல்
கோவை: அரசு கல்லுாரி இளநிலை, முதுநிலை மாணவர்கள் ஆன்லைன் தேர்வுகளுக்கு தயார்படுத்திக்கொள்ள, தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி வீரமணி அறிவுறுத்தியுள்ளார்.பருவத்தேர்வுகள், 10ம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஊரடங்கு காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. மீண்டும் தேர்வுகள் வரும் 27ம் தேதி துவங்கவுள்ளன.&'&'மாணவர்கள் ஆன்லைன் தேர்வுகளுக்கு, தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்; தேர்வு அட்டவணை விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும்,&'&' என்றார், அரசு கல்லுாரி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வீரமணி.