உள்ளூர் செய்திகள்

கல்வி சூழலை சமாளிக்க பெற்றோருக்கும் பயிற்சி

இன்றைய கல்வி சூழலை சமாளிப்பதில் பெற்றோருக்கே பெரும் சவால்&' என்கிறார் லிட்டில் கிங்டம் பள்ளி செயலாளர் ஹேமா.அவர் கூறியதாவது:கடந்த ஓராண்டாக ஆன்லைன் கல்வியே மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. இதற்கு முன் பள்ளிக்கு அனுப்பி வைக்கும் நேரம், மாலையில் படிக்கும் நேரம் மட்டுமே பெற்றோர்களின் பிடியில் குழந்தைகள் இருந்தனர். குழந்தைகளுடன் ஒன்றியிருக்கும் பெற்றோர்கள் ஒரு சிலரே. மீதி பெற்றோருக்கு தற்போதைய ஆன்லைன் கல்வி சூழல் பெரும் சவால்தான். இவர்களுக்கு கவுன்சிலிங் மிக அவசியம். வெளிநாடுகளில் இதற்கென சிறப்பு அமைப்பு உள்ளது.குழந்தை பிறந்த உடனே, பெற்றோர் விவரங்களை தனிப்பட்ட அடையாள எண் அடிப்படையில் பதிவு செய்து விடுகின்றனர். இதன் அடிப்படையில் அந்தந்த வயதில் குழந்தைகள் சந்திக்கும் பிரச்னைகளை கையாளுவது குறித்து பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்குவர். இங்கு அப்படியில்லை. குழந்தைகளின் சிறு அசைவுகளையும், பெற்றோர் கவனிக்க வேண்டும். இது குறித்து பெற்றோருக்கு, &'வாட்ஸ் அப்&' மூலம் பயிற்சி வழங்குகிறேன். இவ்வாறு, ஹேமா கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்