உள்ளூர் செய்திகள்

வேளாண் அறிவியல் பட்டதாரிகளுக்கு வளமான எதிர்காலம்

அம்ரிதா ஸ்கூல் ஆப் அக்ரிகல்ச்சுரல் சயின்சஸ், கடந்த ஜூலை 8ம் தேதி "உணவுப் பாதுகாப்பு மற்றும் எதிர்கால பட்டதாரிகளின் பங்கு" என்ற தலைப்பில் குழு விவாதத்தை நடத்தியது.இந்திய தொழில் கூட்டமைப்பின் வேளாண் குழு தலைவர் திரு. விஜய் சர்தானா, கேரள கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழக தொழில்முனைவோர் பிரிவு முன்னாள் இயக்குநர் மற்றும் கல்வி ஆலோசகர் டாக்டர் டி.பி. சேதுமாதவன், கேரள வேளாண் பல்கலைக்கழகத்தின் வனவியல் கல்லூரி முன்னாள் முதல்வர் டாக்டர் கே. சுதாகரா, பார்ம் டெக் கன்சல்டென்சி நிர்வாக இயக்குநர் மற்றும் டெக் பார்மிங் இன்டர்நேஷனல் பொது மேலாளர் முரளி மனோகர் மற்றும் அம்ரிதா வேளாண் அறிவியல் கல்வி நிறுவன பேராசிரியர் டாக்டர் சுதீஷ் மணலில் ஆகியோர் பங்கேற்கேற்றனர்.வேளாண்மை அறிவியல் துறையின் வளமான எதிர்காலம் குறித்தும், உணவு பாதுகாப்பு மற்றும் உணவு துறையின் முக்கியத்துவம் குறித்தும் இந்நிகழ்ச்சியில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. குழு விவாதத்தை இந்திய தொழில் கூட்டமைப்பின் வேளாண் குழு தலைவர் திரு. விஜய் சர்தானா துவக்கி் வைத்து, வேளாண் துறையில் வேளாண் பட்டதாரிகளுக்கான வாய்ப்புகள் குறித்து பேசினார். அவர் பேசுகையில், ’138 கோடி மனித மக்கள்தொகை கொண்ட நமது நாட்டில் உணவு பாதுகாப்பு மிகவும் இன்றியமையாதது. அனைவருக்கும் சத்தான, கலப்படமற்ற மற்றும் மலிவான விலையில் உணவு கிடைக்கப்பட வேண்டும். விவசாய துறையில் பட்டம் பெறுபவர்கள், அனைத்து வழிகளிலும் மிகவும் புதுமையாக செயல்படவும், நேர்மறையானவர்களாக இருக்கவும், சவால்களை சமாளிக்கும் திறனுடன் செயல்படவும், ரோபாட்டிக்ஸ், நியூரல் நெட்வொர்க் மற்றும் ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் ஆகிய புதிய தொழில்நுட்பங்களில் நிபுணத்துடன் செயல்படவும் உரிய பயிற்சி அளிக்கப்பட வேண்டும்,’ என்றார். டாக்டர் டி.பி. சேதுமாதவன், &'வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய துறையில் உள்ள ஏராளமான வாய்ப்புகள்’ குறித்து விளக்கினார். மேலும், &'வேளாண்மை, சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் கல்வி போன்ற துறைகள் கொரோனாவால் குறைவாகவே பாதிக்கப்பட்டுள்ளன’ என்றும் குறிப்பிட்டார்.டாக்டர் கே. சுதாகரா, நான்கு ஆண்டு பி.எஸ்சி., ஹான்ஸ் வேளாண் திட்டத்தின் முக்கியத்துவத்தை விளக்கினார். வேளாண் மற்றும் அது சார்ந்த துறைகளின் முக்கியத்துவம் மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்தும் விரிவாக பேசினார்.திரு. முரளி மனோகர், ‘தொழில்துறையில் விவசாய பட்டதாரிகளின் பங்கு’ குறித்து பேசுகையில், &'2050ம் ஆண்டுகளில் 85 சதவீத மக்கள் நகரங்களில் வசிப்பார்கள்’ என்றும் அக்வாபோனிக்ஸ், ஹைட்ரோபோனிக்ஸ் மற்றும் ஏரோபோனிக்ஸ் போன்ற நகர்ப்புற விவசாய தொழில்நுட்பங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன’ என்றும் தெரிவித்தார். மேலும், செயற்கை நுண்ணறிவு, ட்ரோன் தொழில்நுட்பங்கள், பிளாக் செயின், ஐ.ஓ.டி., சென்சார்கள், நானோ தொழில்நுட்பம், மரபணு எடிட்டிங், ரோபாட்டிக்ஸ், செயற்கை உயிரியல் மற்றும் 3டி பிரிண்டிங் உள்ளிட்ட தொழில்நுட்பங்களின் வாய்ப்புகள் குறித்தும் பயோ பிளாஸ்டிக், வெர்டிகல் பார்மிங், பாலைவன விவசாயம் மற்றும் கடல் விவசாயம் தொடர்பான தொழில்நுட்பங்கள் குறித்தும் அவர் விளக்கி பேசினார்.இறுதியாக, அமிர்தா ஸ்கூல் ஆப் அக்ரிகல்ச்சுரல் சயின்சஸ் பேராசிரியர் டாக்டர் சுதீஷ் மணிலில், &'புதுமையான விவசாய நடைமுறைகள் மூலம் சமூகத்தை மேம்படுத்துவதில் அம்மாவின் பங்கு, கொள்கைகள் மற்றும் குறிக்கோள்கள்’ குறித்து பேசினார்.  &'வழக்கமான பல்கலைக்கழகங்களுடன் ஒப்பிடும்போது, வேளான் ஆராய்ச்சி மற்றும் கல்வியில் அம்ரிதா கல்வி நிறுவனம் மாறுபட்டு, பலதரப்பட்ட அணுகுமுறையை வழங்குகிறது &'என்றும் &'வேளாண் துறையில் நிலவும் சிக்கல்களைத் தீர்ப்பதில் பொறியியல், பயோடெக்னாலஜி, மருத்துவம், நானோ தொழில்நுட்பம் ஆகியவற்றுடன் ஒத்துழைப்பு அவசியம்’ என்றும் கூறினார்.இந்த நிகழ்ச்சியில், நாடு முழுவதும் இருந்து ஏராளமான மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை நிஜா அமோகன் மற்றும் அமிர்த விஸ்வ வித்யாபீடத்தின் மாணவர் சேர்க்கை துறையை சேர்ந்த ராகேஷ் ராகவன் ஆகியோர்  ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்