உள்ளூர் செய்திகள்

நாளை தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு

அரசுத் தேர்வுகள் மதுரை மண்டலத் துணை இயக்குனர் பழனிச்சாமி அறிக்கை தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை முதல் டிச., 5ம் தேதி வரை மதுரை, திண்டுக்கல், பரமக்குடி, விருதுநகர், அருப்புக்கோட்டை தேர்வு மையங்களில் நடக்கிறது. காலை 10 முதல் மதியம் 12 மணி வரை நடக் கும் இத்தேர்வுக்காக, அனுமதிச் சீட்டுகள் அவரவர் இருப்பிட முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளன. கிடைக்கப் பெறாதவர்கள் தேர்வுக் கட்டணம் செலுத்தியதற்கான கருவூல ரசீது மற்றும் விண்ணப்பம் அனுப்பியதற்கான அஞ்சல் ரசீதுடன் மண்டல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். கடந்த தேர்வு முதல், மதிப்பெண் சான்றிதழில் தேர்வர்களின் போட்டோ ஒட்டப்படுவதால், தேர்வுக்கு செல்லும்போது விண்ணப்பத்தில் ஒட்டிய போட்டோ போன்று ஒரு போட்டோவை தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளரிடம் முதல் நாளன்றே ஒப்படைக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்