எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலை. புதிய துணைவேந்தர்
அவர் இந்தப் பதவியில் மூன்று ஆண்டு காலம் இருப்பார் என்று ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. ஏற்கெனவே துணைவேந்தராக இருந்த டாக்டர் கே. மீர் முஸ்தபா உசேனின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து டாக்டர் நடராஜன் புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மருத்துவக் கல்லூரியில் முடநீக்கியல் அறுவை சிகிச்சைப் பிரிவின் தலைவராக டாக்டர் நடராஜன் இதுவரை இருந்து வந்தார்.