உள்ளூர் செய்திகள்

விடுமுறை நாட்களில் மன அழுத்தம் அதிகமாகிறது

லண்டனை சேர்ந்த மனோ தத்ததுவ நிபுணர் தினா கேபிரியல் மேற் கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ள தகவல்கள்:பணியாளர்கள் தாங்கள் வேலை செய்யும் அலுவலகத்தில் அதிகாரிகளுக்கு கட்டுப்பட்டு பயந்து நடக்கவேண்டியுள்ளது. தனக்கு கீழ் பணியாற்றும் ஊழியர்களை கட்டுப்படுத்த வேண்டியுள்ளது. மேலும் பணி நெருக்கடிகளையும் சந்திக்கின்றனர். இதனால் அவர்களுக்கு பலவித துன்பங்கள், கவலைகள் உண்டாகின்றன; மனஅழுத்தம் அதிகமாகிறது.அலுவலகத்தில் இப்படி என்றாலும், விடுமுறை எடுத்து வீட்டில் ஜாலியாக இருக்க நினைத்தாலும் முடியவில்லை. அவர்களுக்கு அங்கும் பலபிரச்னைகள் காத்திருக்கின்றன. பொருளாதார சிக்கல்கள் மனதில் நிழலாடுகின்றன.விடுமுறையில் இருந்தாலும் அவர்களுக்கு அலுவலக ஞாபகம் தான் இருக்கும்.விடுமுறை எடுத்ததால் வேலை தேங்கி இருக்குமோ; மேலதிகாரி தன்னை வேலையை விட்டு எடுத்து விடுவாரோ என்ற பயம் இருந்து கொண்டு தான் இருக்கும்.இதனால் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு; கவலை, சோர்வு, தலைவலி, தசைபிடிப்பு, தூக்க மின்மை மற்றும் வயிற்று உபாதைகள் ஏற்படும்.இவ்வாறு ஆய்வில் தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்