இந்தியா வரும் ஆப்ரிக்க மாணவர்களுக்கு உதவித்தொகை
அட்டிஸ் அபாபா: ஆப்ரிக்காவில் கல்வி நிறுவனங்கள் மற்றும் தொடர்பியல் வசதிகளை நிறுவ இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து தென்ஆப்ரிக்காவுக்கான மத்திய வெளியுறுவுத் துறை இணை செயலர் குர்ஜித் சிங் கூறுகையில், “ஆப்ரிக்காவில் கல்வி மற்றும் தொடர்பியல் வசதிகள் உட்பட 19 வேறுபட்ட கல்வி நிறுவனங்கள் நிறுவப்படும். இந்தியாவில் முதுநிலை படிக்க வரும் ஆப்ரிக்க மாணவர்களுக்கான உதவித்தொகை எண்ணிக்கையை 300 ஆக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.” என்றார்.