வெளிநாடுகளில் ஐ.ஐ.டி. கிளைகள் துவக்க திட்டம்
இந்த கல்வி நிறுவனங்களின் கிளைகளை வெளிநாடுகளில் துவங்கப்பட உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியா மற்றும் சிங்கப்பூர் இணைந்து 14 உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களை இந்தியாவில் நிறுவ உள்ளன. திறன்களுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், இத்தேவையை பூர்த்தி செய்ய ஆக்கப்பூர்வமான நவீன பல்கலைக்கழங்கள் அதிகளவில் இந்தியாவிற்கு தேவைப்படுகிறது. இதற்கு ஒத்துழைப்பதில் சிங்கப்பூர் ஒரு சிறந்த நாடாக அமையும். உள்கட்டமைப்பு வசதிகள், கல்வி, திறன் மேம்பாடு போன்றவற்றில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும். ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் சிங்கப்பூர் அதிக திறன் பெற்ற நாடாக உள்ளது. இந்தநிலையில், சிங்கப்பூர் உடன் அதிக மனிதவளத்தை கொண்ட இந்தியா சேர்வதன் மூலம், இந்த இரு நாடுகளும் வெற்றி பெற முடியும். கல்வித் துறையை சீரமைப்பதில் இந்தியா சமீப காலமாக அதிக அக்கறை செலுத்திவருகிறது. இதற்கான பலன் 2014ம் ஆண்டுகளில் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் கபில் சிபல் தெரிவித்துள்ளார். ‘ஆசிரியர் பற்றாக்குறை உட்பட சில பாதகமான நிலை இருப்பதால், ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களுக்கான கிளைகளை வெளிநாடுகளில் திறப்பது உடனடியாக சாத்தியமில்லை’ என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கூறி வந்த நிலையில் கபில் சிபில் இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.